Download this Blogger Template by Clicking Here!

Ad 468 X 60

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Wednesday, December 11, 2013

7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு         அவசியம்............!!!!!!



The vegetables we consume too much food for 5 days in a week is included in the body of toxic chemicals can be reduced
 வாரத்தில் 5 நாட்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும்  ரசாயனங்களை குறைக்கலாம் என்று கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரிய விஞ்ஞானிகள் குழுவினர் உடல் நலனில் காய்கறிகளின்  பங்கு பற்றி விரிவாக ஆராய்ந்தனர்.














அதற்காக ஒரு குழுவை தேர்வுசெய்து அவர்களை கோயில் ஒன்றில் தங்க வைத்தனர். அவர்களுக்கு சைவ உணவை வழங்கப்பட்டது.. இந்த  ஆய்வுக்கு முன்பும் அவர்களின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் 5 நாட்களுக்கு பிறகும் குழுவினரின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. கோயிலில்  தங்கி சைவ உணவை மட்டுமே சாப்பிட்ட பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு குறைந்திருந்தது  தெரிய வந்தது.

வாரத்தின் மீதி நாட்களில் அசைவ உணவுகள், கொறிக்கும் வகையில், சாப்பிட அனுமதிக்கப்பட்டது. அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு  எடுக்கப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு குறைந்திருந்தது தெரியவந்தது. எனவே வாரத்ததில் குறைந்தபட்சம்  5நாட்கள் காய்கறிகள் சேர்ந்த சைவ உணவு அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சிக்குழு ஆய்வாளர் கூறுகையில் சைவ அசைவ உணவுகளால் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் சிறுநீர்  பரிசோதனையில் உடனுக்குடன் தெரிகின்றது. ரசாயன சுரப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்தை காக்க வாரத்தில் 5நாட்கள் காய்கறிகள் கலந்த  சைவ உணவு அவசியம் என்கின்றனர்.


Thanks for google search
As of This content all are sharing of other blogs, website, forums it is not own idea. I wish to share the author comments directly. the credit goes to author for wonderful clerical idea .Legally I am not Responsible of this Post Matters.It is For Fun & Share. 

Read More »

எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய 
நன்மைகள்....!!!!

Posted Image

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்....!!!!

1.நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது... எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்து
க்கிறது

2. உடலின் pH ஐ சீராக்குகிறது... எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது

3. உடல் எடையைக் குறைக்கிறது... எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை

4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்
கிறது

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது

7. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது

9. stress ஐ குறைக்கிறது. இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை. 10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.



Thanks for google search

As of This content all are sharing of other blogs, website, forums it is not own idea. I wish to share the author comments directly. the credit goes to author for wonderful clerical idea .Legally I am not Responsible of this Post Matters.It is For Fun & Share. 


Read More »

Tuesday, December 10, 2013

அழகுக்கும் அடிப்படையாகும் உணவு!




Ponnan eyelid eyelid doubt assist in karicalan beauty. Plucked spinach processed talaikkut

கரிசலாங்கண்ணியும்பொன்னாங்கண்ணியும்அழகுக்குஉதவுபவை
என்பதில்சந்தேகமில்லை.கீரையைப்பறித்துப்பதப்படுத்தித்தலைக்குத்தேய்க்கவோ,மூலிகைகளைத்தேடிக்கண்டுபிடித்து முகத்துக்குத்தடவவோ இன்று யாருக்கும் நேரமோ, பொறுமையோ கிடையாது. எல்லாவற்றிலும் அவசரமாகப் பலன் எதிர்பார்க்கும் மக்கள், அழகு விஷயத்திலும் அப்படித்தான். இன்ஸ்டன்ட் அழகைக் கொடுப்பதால்தான் மக்கள் கூட்டம் பார்லர்களை நோக்கிப் படையெடுக்கிறது. 

ஆனால், அழகு என்பது அவசரத்தில் வாய்ப்பதில்லை. அதற்காக காடு, மலை, கடல் தாண்டி, மூலிகைகளைத் தேடிக்கொண்டு வந்தோ, பார்லர்களில் போய் காஸ்ட்லியான சிகிச்சைகளை செய்து கொண்டோதான் அழகாக வேண்டும் என்றில்லை. உணவே மருந்து மட்டுமல்ல... உணவுதான் அழகுக்கும் அடிப்படை என்கிறார் அழகு மற்றும் உணவியல் நிபுணர் ஹேமா லஷ்மணன்.

நமக்கு கைக்கெட்டிய தூரத்தில் - அதாவது, சமையலறையில் தினசரி நமது கண்களில் பட்டுக் கொண்டிருக்கும் பொருள்களை சரியாக உபயோகித்தாலே அழகு தேடி வரும் என்கிறவர், அப்படி சில பொருள்களையும் அவற்றின் பலன்களையும் பட்டியலிடுகிறார்.

மாதுளை

இயற்கை நமக்களித்துள்ள மிகப்பெரிய வரப் பிரசாதம் இது. மாதுளையின் சாறெடுத்து, சிறிது தண்ணீர் கலந்து குடித்தால், ரத்தசோகை காணாமல் போகும். சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஒரே நேரத்தில் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். செரிமானத்தை சீராக்கி, உடல் சூட்டை தணித்து, பலவீனம் போக்கி, ரத்த விருத்திக்கு உதவும். மாதுளம் பழத்தோலை வெயிலில் காய வைத்து, பொடித்து, அரை டீஸ்பூன் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்தால் உடல் வலிமையும் வனப்பும் பெறும்.

மருதாணிப் பொடியுடன், சிறிதளவு மாதுளை ஜூஸ், காபி தூள், சிறிது புரோட்டீன் பவுடர், எலுமிச்சைச் சாறு எல்லாம் கலந்து ஒரு நாள் முழுக்க ஊற வைத்து, தலையில் தடவிக் குளித்தால், கூந்தல் அழகான ‘பர்கண்டி’ கலர் பெறும்.

மாதுளையை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கு உதடுகள் இயற்கையான சிவப்பழகும் பளபளப்பும் பெறும். மாதுளை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு வரும் என நினைப்போர், அதை முழுதாக அப்படியே வெந்நீரில் சிறிது நேரம் போட்டு வைத்திருந்து, பிறகு உடைத்துச் சாப்பிடலாம்.

பப்பாளி

பப்பாளியை அழகு தரும் பழம் என்றே சொல்லலாம். பருமனை நீக்கி, மேனிக்கு மெருகூட்டுவதில்
பப்பாளிக்கு  இணையே இல்லை. பப்பாளியின் இலையும் மருத்துவ குணம் வாய்ந்தது. பப்பாளி இலையைக் காய வைத்து அரைத்துக் கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் அளவு எடுத்து, 1 டீஸ்பூன் மாதுளை சாறு கலந்து, முகத்துக்கு பேக் மாதிரி போட்டுக் கழுவினால், முகம், கழுத்துப் பகுதிகளில் உள்ள கருமை போகும். அலர்ஜி இல்லாதவர்கள் மட்டும் இதைச் செய்யவும்.

கொய்யா

ஒரு ஸ்லைஸ் கொய்யா, ஒரு ஸ்லைஸ் ஆப்பிள், ஒரு ஸ்லைஸ் பேரிக்காய் மூன்றையும் தினம் 5 முறைகள் இடைவெளி விட்டு சாப்பிட்டால்
உங்கள் சருமம் கண்ணாடி போல மின்னும்.

தனியா
   
தனியாவை சுத்தம் செய்து, இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் அந்தத் தண்ணீரை குடித்தால், உடல் குளிர்ச்சியடையும். தனியாவை பொடித்து வைத்துக் கொண்டு, சமைக்கிற எல்லாவற்றிலும் சிறிது சேர்த்துச் சாப்பிடுகிற பழக்கம் இருந்தால், செரிமானமும் சீராகும்.

கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். கடுகை மிகக்குறைந்த அளவுதான் உபயோகிக்க வேண்டும். அது வெடித்து, அதிலுள்ள சல்ஃபர் வெளியேற வேண்டும். கடுகெண்ணெய் மிகச்சிறந்த வலி நிவாரணி. கழுத்தைச் சுற்றிலும், இடுப்பைச் சுற்றியும் கருப்பு உள்ளவர்கள், கடுகெண்ணெய் கொண்டு மசாஜ் செய்து துடைத்தால், கருமை நீங்கி, சருமம் பளிச்சென மாறும்.

ஜாதிக்காய்

வயிற்றுப் பிரச்னைகளுக்கு மருந்து. நரம்புகள் வலிமை பெறும். ஜாதிக்காயைப் பொடித்து, கால் டீஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் பிசைந்து ஒரு வாய் சாப்பிட்டால், வாயுத்தொல்லை இருக்காது.

ஜாதிக்காயை பால் விட்டு அரைத்து, கண்களுக்கு அடியில் வாரம் 2 முறை, 3 மாதங்களுக்குச் செய்து வந்தால், கருமை மறையும்.

கொத்தமல்லி

கொத்தமல்லியை சமைக்கிற எல்லாவற்றிலும் சேர்த்துக் கொள்ளலாம். கொத்தமல்லிச்சாறு பருக்களையும் பரு வந்த தழும்புகளையும் போக்கக்கூடியது.


Thanks for google search
As of This content all are sharing of other blogs, website, forums it is not own idea. I wish to share the author comments directly. the credit goes to author for wonderful clerical idea .Legally I am not Responsible of this Post Matters.It is For Fun & Share. 

Read More »
நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

அருகம்புல் சாறு.: 

எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. புதியதாக குளுக்கோஸ் ஏற்றியது போலவும், உடலுக்கு புது ரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சக்தியை அளிக்கும். ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மலச்சிக்களை தீர்க்கும். ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும். ரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். வாய்துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும்.


ஆஸ்துமா ரத்த அழுத்தத்தை குறைக்கும். தாய்பாலை அதிகரிக்க செய்யும். உடலில் நச்சுத்தன்மையை அகற்றும். கொழுப்பு சத்தை குறைக்கும்.


Posted Image

துளசி இலைச்சாறு: 

காய்ச்சல், இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள் காதுவலி ஆகியவற்றறை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யும்.


தூதுவளை இலைச்சாறு: 

மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும்.


மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு: 

உடல்நிறம் பொலிவு பெறும். கண்களுக்கு நல்ல பார்வை கிடைக்கும். மூளைக்கு சுறுசுறுப்பை தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.


பொண்ணாங்கண்ணி சாறு: 

உடலுக்கு வலிமை ஊட்டும். பொன் போல் உடல் பளபளப்பாகும். கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல்சூடு குறையும்.


வல்லாரை இலைச்சாறு: 

நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி அகலும். வயிற்று நோய்கள், குடல் நோய்கள், நீங்கும். தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும் இதயம் வலுவாகும்.


வில்வ இலைச்சாறு: 


காய்ச்சல், நீரிழிவு குறையும். வயிற்று புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும். மந்த புத்தி மாறும். மஞ்சள் காமாலையை போக்கும்.. காலாரா குறையும்.


புதினா இலைச்சாறு: 

வாய் புண், வயிறு, குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். வெண்குஷ்டம் குறையும்.


நெல்லிக்காய் சாறு: 

தலைமுடி உதிர்வது குறையும். தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள், குறையும். நன்கு பசி எடுக்கும். இதயநோய்கள், நீரிழிவு நோய், தோல் நோய் குறையும். உடல் பலமடையும்


வாழைத்தண்டு சாறு: 


சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம் தொந்தி, அமிலத்தனமை போன்றவற்றை குறைக்கும். உடல், கை, கால் வீக்கத்தை குறைக்கும். ரத்தம் சுத்தமாகும்.


கேரட் சாறு: 

கண் பார்வை ஒளி பெறும். கண் நோய்கள், பல் நோய்கள் குறையும். அமிலத்தன்மையை குறைக்கும்.


அரச இலைச்சாறு: 


மலச்சிக்கல், உடல்சூடு, கர்ப்பப்பை நோய்களை குறைக்கும். காம உணர்ச்சியை தூண்டச் செய்யும்.




கொத்தமல்லி சாறு: 

பசியை தூண்டும். பித்தம், வாத நோய், காய்ச்சல் குறையும். மூலம், சளி, இருமல் குறையும்



As of This content all are sharing of other blogs, website, forums it is not own idea. I wish to share the author comments directly. the credit goes to author for wonderful clerical idea .Legally I am not Responsible of this Post Matters.It is For Fun & Share. .

Read More »
முதுமையிலும் இளமையாக வாழலாம்

மழலை, இளமை, முதுமை என்ற வாழ்வின் மூன்று நிலைகளில், மழலை மற்றும் முதுமைப் பருவம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அனைவருமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டிஏஜிங் கிரீம்களை பயன்படுத்துகின்றனர்.


Posted Image

இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்னைக்கு உணவு, உடற்பயிற்சிகளால் தீர்வு காண முடியும். நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் குறிப்பாக வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டாகரோட்டீன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும். கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது. முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது. குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டாகரோட்டீன் அதிகம் உள்ளன. பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை, அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடு இருக்கலாம். தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கு மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும். நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.


‘நடந்தால் நாடும் உறவாகும்
படுத்தால் பாயும் பகையாகும்’


உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு, உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும். நிம்மதியான தூக்கம் வரும். எந்த பக்கவிளைவும் இல்லாதது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி. எனவே, உடற்பயிற்சியின் மூலம் உற்சாக வாழ்வை வாழலாம்.‘

வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச்சி. மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். மற்றவர்களுடன் உரையாடியபடியே நடக்கும்போது, மனதிலும், உடலிலும் உற்சாகம் பிறக்கும்.

‘அவசியம் தேவை’

அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்று இருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். அதிக பருமன் இல்லாத, நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும் ஒருவருக்கு, 1,800 முதல் 2,000 கிலோ கலோரி தேவை. உடலில் புரதச்சத்து குறைந்தால், உடலில் சதை பலவீனம் அடைந்து, உடல் இளைத்தது போல் ஆகிவிடும். உடல் எடையின் அளவைப் பொறுத்து, அதே அளவை கிராமில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, ஒருவர் 55 கிலோ எடை இருந்தால், தினசரி உணவில் 55 கிராம் புரதச்சத்து தேவை.

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களில் அதிக அளவில் இருக்கிறது. அந்தந்த பருவத்தில் கிடைக்கும், அந்தந்த ஊரில் விளையும் காய்கறி, பழங்களை எடுத்துக்கொண்டால், போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பழங்களை, உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

காலை ஆறு மணிக்கு எழுந்து உடற்பயிற்சியை முடித்துவிடுங்கள். சுகமான காற்று முகத்தில்படும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும். பிறகு, அரை மணி நேரம் கழித்து பால், காபி, டீ என ஏதாவது ஒன்றைக் குடிக்கலாம். 8 மணிக்கு 3 இட்லி, தோசை, இடியாப்பம் என எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். மதியம் 1 மணிக்கும், இரவில் 8 மணிக்கும் சாப்பிட வேண்டும். கண்டிப்பாக 10 மணிக்கு மேல் தூங்கிவிட வேண்டும். இதுபோன்று கடைப்பிடித்தால் கண்டிப்பாக முதுமையிலும் இளமையாக வாழ முடியும்.
 

Thanks to Mr

Gunam121 




As of This content all are sharing of other blogs, website, forums it is not own idea. I wish to share the author comments directly. the credit goes to author for wonderful clerical idea .Legally I am not Responsible of this Post Matters.It is For Fun & Share. 
0


Read More »

Monday, December 9, 2013


How Products Are Made


Posted Image


ஒவ்வோரு பொருட்களையும் எவ்வாறு தயாரிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள ஒரு இணையத்தளம் இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு உலகில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான எத்தனை எத்தனை சாதனங்கள் பொருட்கள் என தயாரிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. இப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன. என அறிய யாருக்குதான் ஆர்வமிருக்காது, சிறிய பொருட்களில் இருந்து பெரிய பொருட்கள் வரை அவை எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை விபரமாக வழங்கும் தளம்தான் இந்த இணையத்தளம்
இந்த இணையத்தளம் இங்கு குறித்த பொருட்களின் உருவாக்கம் பற்றிய நிழற்படங்களுடன் கூடிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது இது மிகவும் பயனுள்ள இணையத்தளம் என்பது குறிப்பிடதக்கது 


இணையத்தள முகவரி CLICK HERE 


Thanks to Mr

Gunam121 




As of This content all are sharing of other blogs, website, forums it is not own idea. I wish to share the author comments directly. the credit goes to author for wonderful clerical idea .Legally I am not Responsible of this Post Matters.It is For Fun & Share. 

Read More »